இந்தியா

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்

DIN

சிக்கிம் மாநில அரசின் விளம்பரத் தூதராக தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அந்த மாநில அரசின் தலைமைச் செயலர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிக்கிம் அரசின் சாதனைகளையும், நலத் திட்டங்களையும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ரஹ்மான் கொண்டு செல்வார்.
இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமான சிக்கிம், கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது என்று அந்த அறிவிக்கையில் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சுற்றுலா மற்றும் தொழில் துறை விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மானை இந்த ஆண்டு தொடக்கத்தில் சிக்கிம் அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

கரூாில் கனமழை!

பிரதோஷ நாளில்...

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பல கோடிகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT