இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத குழுக்கள் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங் உறுதி

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பயங்கரவாத குழுக்கள் முழுமையாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள நகருக்கு 2 நாள் பயணமாக வந்த அவர், செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களால் உருக்குலைந்த ஜம்மு-காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதே மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மை நோக்கமாகும். அந்த மாநிலத்தில் பயங்கரவாதச் செயல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அங்கு இனிமேலும் பயங்கரவாதம் நீடிப்பதை சகித்துக் கொள்ள முடியாது. அந்த மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும். எந்த வித தாக்குதல் முயற்சியையும் முறியடிப்பதற்கு பாதுகாப்புப் படைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 
பாஜக செவ்வாய்க்கிழமை விலக்கிக் கொண்டதை அடுத்து, அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பயங்கரவாத குழுக்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, பிரபல வார இதழ் ஒன்றுக்கு ராஜ்நாத் சிங் புதன்கிழமை பேட்டியளித்தார். அவரிடம், பிரதமர் மோடியின் காஷ்மீர் கொள்கை தோல்வியடைந்து விட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, பிரதமர் மோடியின் காஷ்மீர் கொள்கை சரியானதே, அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 
ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்னை இன்றைய, நேற்றைய பிரச்னை அல்ல. அது பல ஆண்டுகளாக எல்லா அரசுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக நீடித்து வருகிறது. அதில், வெற்றி பெறுவதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது'' என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT