இந்தியா

போலீஸ் பிடியில் இருந்து தப்பிய லஸ்கர் தீவிரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்த பயங்கரம்! 

ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

DIN

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் நாவீத். ஜம்மு போலீசார் பிடியில் இருந்த இவன், கடந்த 6-ஆம் தேதி ஸ்ரீநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டன.

அப்பொழுது அங்கு திடீரென்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, நாவீத்தை தப்பிக்க வைத்தனர். அவனைப் பிடிக்க போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வெற்றியடையவில்லை.

இந்நிலையில் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனை தாக்குதலில் போலீசிடம் இருந்து தப்பிய லஷ்கர் தீவிரவாதி நாவீத், தற்பொழுது  ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் வனப்பகுதி ஒன்றில் அவன் இருக்கும் விடியோ ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் கையில் மோட்டார் துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டிருக்கும் நாவீத், பிற ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகளுடன் சிரித்துப் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த விடியோவின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அதுவரை இவ்விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது என்றும் பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT