இந்தியா

ஜல்லிக்கட்டு போராட்டம்போல் மக்களிடம் காவிரி குறித்த உணர்வை எடுத்துச்செல்வோம்: தம்பிதுரை

DIN

ஜல்லிக்கட்டு போராட்டம்போல் மக்களிடம் காவிரி குறித்த உணர்வை எடுத்துச்செல்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து அதிமுக எம்.பி-க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
காவிரி பிரச்னையில் எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என அவைக்குள்ளேயும் வெளியேயும் போராடினோம். நாங்கள் போராடும் போது நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றியது கருப்புதினமாகும். 

மேலாண்மை வாரியம் குறித்து எந்த பதிலும் தராமல் எங்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்க முதல்வர் கோரிக்கை விடுத்தது பற்றி பிரதமரிடம் எந்த பதிலும் இல்லை. மத்திய அரசு வஞ்சிப்பது பற்றி தமிழக மக்களிடம் எடுத்துக்கூறி மக்கள் இயக்கத்தை உருவாக்குவோம். நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் தமிழகம் முழுவதும் மக்களிடையே எடுத்துரைப்போம். 

ஜல்லிக்கட்டு போராட்டம்போல் மக்களிடம் காவிரி குறித்த உணர்வை எடுத்துச்செல்வோம்.  தேனியில் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்த முயன்றால் கடுமையாக எதிர்ப்போம். மேலாண்மை வாரியம் அமைப்பதில் வெற்றி காணும் வரை அதிமுக எம்பிக்கள் போராட்டம் தொடரும் என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT