இந்தியா

நிலக்கரி சுரங்க ஊழல்: விசாரணை வளையத்தில் முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகள்

DIN

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணை வளையத்துக்குள் முன்னாள் பிரதமர் அலுவலக அதிகாரிகளும் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்தது.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் இதுதொடர்பாக புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதில்: நிலக்கரித் துறையை தன்வசம் வைத்திருந்த முன்னாள் பிரதமரிடம் ஒப்புதல் பெறுவதற்காக வைக்கப்பட்டிருந்த சில ஆவணங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. அந்த ஆவணங்களை கையாண்ட அதிகாரிகளை சிபிஐ விசாரித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. நடவடிக்கை எடுக்குமாறு அரசிடமும் சிபிஐ பரிந்துரைக்கவில்லை என்று அந்தப் பதிலில் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டுள்ளார்.
சலுகையை விட்டுக் கொடுத்த மூத்த குடிமக்கள்: இதனிடையே, கடந்த 7 மாதங்களில் ரயில்வே பயணச்சீட்டு சலுகையை 9 லட்சம் மூத்த குடிமக்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றனர் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக ரயில்வே துறை இணை அமைச்சர் ராஜன் கோஜெயின் தாக்கல் செய்த பதிலில், 'கடந்த 7 மாதங்களில் மட்டும் 9.08 லட்சம் மூத்த குடிமக்கள் பயணச்சீட்டு சலுகையை விட்டுக் கொடுக்க முன்வந்தனர். அதேநேரம், 8.55 லட்சம் மூத்த குடிமக்கள் 50 சதவீத கட்டணத்தை விட்டுக்கொடுக்க முன்வந்தனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT