இந்தியா

2ஜி மேல்முறையீட்டு வழக்கு: பதிலளிக்கக் கோரி ஆ. ராசா, கனிமொழிக்கு நோட்டீஸ்

DIN


புது தில்லி:  அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தொடர்ந்த 2ஜி மேல்முறையீட்டு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக அமலாக்கத் துறை (ஈடி), மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஆகியவை தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் தாக்கல் செய்திருக்கும் மனுக்கள் மீது, 2ஜி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் ஆ. ராசா, கனிமொழி உள்பட 14 பேரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை திங்கட்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வுத் துறையும் (சிபிஐ) தில்லி உயர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இந்த இரண்டு மனுக்களும் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி. கர்க் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மே 25க்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

SCROLL FOR NEXT