இந்தியா

சிக்கிம், அருணாச்சலம் எல்லைப் பகுதிகளில் பாராளுமன்ற வெளியுறவுத்துறை நிலைக்குழு ஆய்வு

Raghavendran

சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் பாராளுமன்ற வெளியுறவுத்துறை நிலைக்குழு ஆய்வு செய்யவுள்ளது.

இந்தியா, சீனா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவங்களுக்கு இடையில் எல்லை தொடர்பான பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து இவ்விவகாரம் சுமார் 78 நாட்கள் நீடித்தது.

பின்னர் இரு நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் எல்லைப் பகுதியில் சமாதானம் ஏற்பட்டு இயல்பு நிலை திரும்பியது.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற வெளியுறவுத்துறை நிலைக்குழுவானது இம்மாத இறுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், டோக்லாம் விவகாரம் பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT