இந்தியா

மின்னல் தாக்கி 100 வீடுகள் எரிந்து நாசம்

Raghavendran

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை புழுதிப் புயல் தாக்கியது. அப்போது இடி, மின்னலுடன் பெய்த கன மழையில் சுமார் 134 பேர் உயிரிழந்தனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சம்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்புரா என்ற பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்னல் தாக்கியது. இதனால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமாயின.

இச்சம்பவத்தில் தீயணைக்கம் பணியில் 3 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் பொருட்சேதம் ஏற்பட்டாலும், உயிர்ச்சேதம் குறித்த எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT