இந்தியா

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: நிதித்துறையில் இருந்து அருண் ஜேட்லி விடுவிப்பு 

DIN

புதுதில்லி: மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். அதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தது. சிகிச்சைக்கு பின்பு அருண் ஜெட்லி வேகமாக குணமடைந்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, உடல் நலக் குறைவால் அவதிப்படும்  அருண் ஜேட்லி நிதித்துறையில் இருந்து  விடுவிகப்பட்டுள்ளார்.

மத்திய ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அருண் ஜேட்லி வகித்து வந்த நிதிதுறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அருண் ஜெட்லியின் உடல் நிலை சரியாகும் வரையில் அவர் பொறுப்பை கவனிப்பார் எனத்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல ஸ்மிருதி இரானியிடம் இருந்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தற்பொழுது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT