இந்தியா

இமயத்தின் சிகரம் தொட்ட இளம் இந்தியர்: பிரதமர் மோடி பாராட்டு

இமயமலையின் சிகரம் தொட்ட இளம் இந்தியர் என்ற சாதனையை ஹரியாணா சிறுமி பெற்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Raghavendran

ஹரியாணா மாநிலத்தில் ஹிஸார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பதக் (வயது 16). இவர், இமயமலையின் சிகரம் தொட்ட இளம் இந்தியர் என்ற சாதனையை ஞாயிற்றுக்கிழமை (மே 20-ஆம் தேதி) படைத்தார். நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு ஏப்ரல் மாதம் வந்தவர், 6-ஆம் தேதி தனது சாதனைப் பயணத்தை தொடங்கினார்.

இன்னும் 2 மாதங்களில் தனது 17-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள ஷிவாங்கி, நான் இங்கே எனது சிறு வயது கனவை நினைவாக்க வந்துள்ளேன். இந்த அழகிய உலகில் அமைந்துள்ள அனைத்து மலைகளின் சிகரங்களையும் தொட வேண்டும் என்பதே எனது வாழ்நாள் இலக்கு. எனக்கு 15 வயதான போது அருணிமா சின்ஹாவுடைய வாழ்க்கைப் படத்தைப் பார்த்தேன். அப்போது முதல் அவரால் சாதிக்க முடிந்தது என்னாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. எனக்கு படிப்பில் பெரிய நாட்டமில்லை. எனவே மலையேற்றத்தை தேர்வு செய்தேன் என்றார்.

ஜவஹர் மலையேறும் பயிற்சி மையத்தில் அடிப்படையிலிருந்து மலையேறும் பயிற்சியை பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் காஷ்மீர் மலைப்பகுதிகளிலும் பயிற்சி பெற்றுள்ளார். சிறுமி ஷிவாங்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 346 பேருக்கு இந்த ஆண்டு இமையமலையின் சிகரம் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. மேலும், தூய்மை கங்கை மற்றும் இமயமலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எல்லையோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த குழுவையும் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இந்த குழுவினர் மலையேறுபவர்களால் வீசப்படும் குப்பைகளை சுத்தம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT