இந்தியா

24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை ரத்து செய்தால் கட்டணப் பிடித்தம் கிடையாது

DIN

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணப் பிடித்தம் கிடையாது என்ற புதிய நடைமுறையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான வரைவுத் திட்டத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதேவேளையில், கட்டணப் பிடித்த விலக்கு பெறுவதற்கும் சில கட்டுப்பாடுகள் அதில் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது, விமானம் புறப்படுவதற்கு 96 மணி நேரத்துக்கு முன்னதாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு இந்தச் சலுகைகள் கிடையாது. மாறாக, அதற்கு பின்னால் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் மட்டுமே கட்டணப் பிடித்தம் வசூலிக்கப்படமாட்டாது.
அதேபோன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பயணிகள் தங்களது பெயர் அல்லது பயண தேதிதிகளில் இலவசமாக திருத்தங்களை மேற்கொள்ளலாம். தற்போதைய நடைமுறைப்படி ரத்து செய்யப்படும் டிக்கெட்டுளுக்கான கட்டணப் பிடித்தத்தை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் பல்வேறு விதமாக வசூலிக்கின்றன. சில நேரங்களில் அதிக அளவில் கட்டணப் பிடித்தம் செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றியமைக்கும் விதமாக புதிய வரைவுத் திட்டம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா அதை செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். பயணிகளின் நலனுக்கான பல்வேறு அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 4 மணி நேரத்துக்கும் மேல் குறிப்பிட்ட விமானம் புறப்படுவதற்குத் தாமதமாகும்பட்சத்தில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதையும் திருப்பியளிக்க வேண்டும் என்று வரைவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று விமானத்தில் பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு ரூ.5,000 இழப்பீடு வழங்கவும் அதில் வகை செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கான அம்சங்களும் வரைவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT