முகப்பு
இந்தியா

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளைக் கொள்ளையடிக்கிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளை பிரதமர் மோடி கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Updated On : 7 நவம்பர், 2018 at 12:58 PM
பகிர்:

புது தில்லி: பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளை பிரதமர் மோடி கொள்ளையடிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் விமானப் படையை கொள்ளையடித்த பின்னர் தற்போது பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகள் கொள்ளையடிக்கப்படுகிறாரகள். மோடியின் 'சூட்-பூட்' நண்பர்களின் பாக்கெட்டுகளை ஆயிரக்கணக்கான கோடிகளால் நிரப்புவதே இத்திட்டத்தின் நோக்கம். 

Advertisement

இவ்வாறு அவர் ஹிந்தியில் தெரிவித்திருந்தார். 

முன்னதாக வெள்ளியன்று அகமதாபாத்தில் பேசும்போது, 'இந்த அரசின் கொள்கைகள் யாவும் விவசாயிகளுக்கு எதிரானவை. 'தி பிரதான்மந்திரி பிமா பசல் யோஜனா' என்பது ரஃபேல் ஊழலை விட மிகப் பெரிய ஊழல்' என்று பேசியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.