இந்தியா

நவ. 14-இல் புஷ்ப யாகம்:  ஆர்ஜித சேவைகள் ரத்து

DIN

திருமலையில் வரும் 14ஆம் தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளதால் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 ஏழுமலையானுக்கு கார்த்திகை மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தன்று புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி வரும் 14ஆம் தேதியன்று காலை வருடாந்திர புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.
 7 டன் மலர்கள் மற்றும் இலைகளால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அன்றைய தினம் அபிஷேகம் நடைபெற உள்ளது. புஷ்ப யாகம் எவ்விதத் தடங்கலும் இல்லாமல் நடைபெற, முந்தைய நாள் (13ஆம் தேதி) மாலை நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணம் என்ற சடங்கை தேவஸ்தானம் நடத்த உள்ளது.
 புஷ்ப யாகத்தை முன்னிட்டு, வரும் 14ஆம் தேதி ஆர்ஜித சேவைகளான சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், 13ஆம் தேதி வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT