இந்தியா

உ.பி.யில் 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம்: அதிர்ச்சியடைந்த கணவர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது குறித்து அவரது கணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ANI


சிதாபுர்: உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பெண்களுக்கு விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது குறித்து அவரது கணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சந்தீப் குமார், தனது மனைவியின் செல்போனுக்கு வந்த தகவலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில் மனைவியின் வங்கிக் கணக்கில் விதவைகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூ.3,000 சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.

அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்குள், தனது மாமியார், மற்றும் சில  பெண்களுக்கும் கணவர் உயிரோடு இருக்கும் போதே விதவைகளுக்கான ஓய்வூதியம் வந்திருப்பதாக செய்திகள் வந்திருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து உடனடியாக புகார்  அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் பதில்  அளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT