இந்தியா

காந்தி படத்தில் ஜின்னாவாக நடித்தவர் காலமானார்: மோடி இரங்கல்

DIN


முன்னாள் விளம்பரப்படத் தயாரிப்பாளரும், ஆஸ்கர் விருது பெற்ற காந்தி திரைப்படத்தில் முகமது அலி ஜின்னாவாக நடித்தவருமான அலிக் பதாம்ஸீ சனிக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
பிரபல முன்னாள் விளம்பரப் படத்தயாரிப்பாளராகவும், முன்னாள் ஊடக தொடர்பாளராகவும் விளங்கிய அலிக் பதாம்ஸீ, தில்லியில் தனது 90வது வயதில் காலமானார். அவர் உலகப்புகழ் பெற்ற ரிச்சர்ட் அட்டன்ப்ரோ இயக்கிய காந்தி ஹாலிவுட் திரைப்படத்தில் முன்னாள் பாகிஸ்தான் கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னா கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது: அலிக் பதாம்ஸீயின் திடீர் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க ஊடக தொடர்பாளராக விளங்கிய அவர், விளம்பர உலகில் ஆற்றிய பணிகள் எப்போதும் நினைவு கூறத்தக்கதாக இருக்கும். அதேபோல திரைப்படத்துறையிலும் அவர் ஆற்றியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT