இந்தியா

ஜெய்ஷ் இ முஹம்மது அமைப்புடன் தொடர்பு: ஜலந்தரில் மூன்று கல்லூரி மாணவர்கள் கைது  

ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று கல்லூரி மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

DIN

சண்டிகர்: ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று கல்லூரி மாணவர்கள் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகிலுள்ள ஷாக்பூரில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கிறது என்ற தகவல் ஜம்மு காஷ்மீர் சிறப்பு போலீஸுக்கு கிடைத்தது. 

உடனே அவர்கள் அந்த கல்லூரி விடுதிக்கு வந்து சோதனை நடத்தினர். அவர்களுடன் பஞ்சாப் மாநில போலீசாருடன் சேர்ந்து சோதனை நடத்தினர். அப்போது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மூன்று மாணவர்களை காவல்துறை கைது செய்தது. 

அத்துடன் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜெமனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

SCROLL FOR NEXT