முகப்பு
இந்தியா

இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி  

சமூக ஆர்வலர் அகர்வால் மரணமடைந்த விவகாரத்தில், 'இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? என்று பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.  

Updated On : 12 அக்டோபர் 2018, 4:54 pm IST
பகிர்:

பெங்களூரு: சமூக ஆர்வலர் அகர்வால் மரணமடைந்த விவகாரத்தில், 'இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? என்று பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.  

கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோத்ரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலரான ஜிடி அகர்வால் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

சுவாமி க்யான் சுவரூப் சதானந்த் என்ற பெயரில் அறியப்பட்டு வந்த அவருக்கு 87 வயதாகிறது. 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்த அவரை புதனன்று போலீஸ் ஹரிதுவாரில் இருந்து மீட்டு  ரிஷிகேஷில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தது. அங்கு அவருக்கு உடனடி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் வியாழனன்று உயிரிழந்தார். இவ்வளவு நாட்களாக வெறும் தண்ணீர் மட்டும் தேனுடன் கலந்து அருந்தி வந்த அவர்,  தன்னுடைய கோரிக்கைகளை அரசு நிராகரித்ததால் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக அதையும் நிறுத்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் சமூக ஆர்வலர் அகர்வால் மரணமடைந்த விவகாரத்தில், 'இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? என்று பிரதமர் மோடிக்கு நடிகை திவ்யா ஸ்பந்தனா கேள்வி எழுப்பியுள்ளார்.  

உண்ணாவிரதத்தின் காரணமாக மரணமடைந்த சமூக ஆர்வலர் அகர்வாலுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும் வகையில் ட்வீட் செய்திருந்த காங்கிரஸைச் சேர்ந்த நடிகையும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா, ' இப்போது ட்வீட் செய்து என்ன பயன்? அவர் உயிருடன் இருக்கும் போது நீங்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக கேலிச்சித்திரம் ஒன்றை தன்னுடைய பக்கத்தில் ட்வீட் செய்ததற்காக  அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments