இந்தியா

மியான்மர் எல்லையில் தீவிரவாதி கைது

தினமணி

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் இருந்து கிழக்கே 110 கிமீ தொலைவில் இந்திய- மியான்மர் எல்லையில் அமைந்துள்ள மொராஹ் நகர்ப்பகுதியில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சீருடை அணிந்த தீவிரவாதியை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
 மணிப்பூர் மொராஹ் நகர்ப்பகுதியில் காலை 8.30 மணியளவில் இந்திய- மியான்மர் எல்லையின் சர்வதேச கதவு எண் 2 பகுதியில் போலீஸ் அதிகாரி எஸ்.இபோம்சா தலைமையிலான போலீஸார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த டபிள்யூ.கிஷன்குமார் என்ற அந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி.தெங்நெüஃபால் தெரிவித்தார்.
 கைது செய்யப்பட்ட தீவிரவாதி மணிப்பூரை மையமாக கொண்டு இயங்கி வரும் மியாம்கி ஃபிங்காங் லான்மி பிரிவை சேர்ந்த தடை செய்யப்பட்ட காங்லிபாக் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தீவிரவாதி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான நபரிடம் எவ்வித ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை என்றும், பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை கண்காணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT