இந்தியா

இந்துக்கள் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் மீது வழக்குப் பதிவு

இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் தன் சிங் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

ANI


பன்ஸ்வாரா: இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறிய ராஜஸ்தான் அமைச்சர் தன் சிங் ராவத் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத ரீதியாக பிரசாரம் மேற்கொண்டதன் மூலம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டக் குற்றத்துக்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ராவத், ராஜஸ்தானில் வசிக்கும் அனைத்து இந்துக்களும் பாஜகவுக்குத்தான் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம்கள் வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது வாக்கினை செலுத்தலாம். ஆனால் அனைத்து இந்துக்களும் பாஜகவுக்கு வாக்களித்து, பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இந்த பேச்சுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

இம்முறை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்: விஜய் சேதுபதி

மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

SCROLL FOR NEXT