இந்தியா

தூய்மை இந்தியா இயக்கத்துக்காக நம்மை அர்ப்பணிப்போம்: பிரதமர் மோடி

காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

DIN

காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழா, வரும் அக்டோர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு, இரண்டு வார பிரசாரத்தை பிரதமர் மோடி சனிக்கிமை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள், பள்ளிச் சிறார்கள், அரசு அலுவலர்கள், சுயஉதவிக் குழுவினர் என பல்வேறு தரப்பு மக்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000 பிரபலங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் ஆகியோருக்கு பிரதமர் தனிப்பட்ட முறையில் கடிதம் அனுப்பியுள்ளார். 

இதேபோல், பிரபலமான சில ஆன்மிகத் தலைவர்கள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள், முன்னணி ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் மோடி கடிதம் அனுப்பியுள்ளார். மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் தூய்மை புரட்சிக்கு வித்திட்டுள்ளது' என்று மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இன்று முதல் காந்தி ஜெயந்தி வரை தூய்மை இந்தியா இயக்கத்துக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். தூய்மையான இந்தியா என்ற காந்தியின் கனவு தற்போது நனவாகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அனைத்து பிரிவுகளில் இருந்தும் மக்களின் பங்களிப்பு உள்ளது என்பது பெருமைக்குரியது.

இந்த திட்டத்தில் இளைஞர்களின் பங்களிப்பு அளப்பரியது. சமூக மாற்றத்தின் தூதுவர்களாக இளைஞர்கள் தான் உள்ளனர். அவர்கள் தூய்மையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்சென்றுவிட்டனர். இந்தியாவில் ஏற்பட்டு வரும் வியத்தகு நேர்மறை மாற்றங்களுக்கு இளைஞர்கள்தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நான் பார்த்த மிகச் சிறந்த டெஸ்ட் தொடர் இதுதான்: இங்கிலாந்து பயிற்சியாளர்

தங்கம் ரூ.800 உயர்ந்த நிலையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000ஆக உயர்வு!

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

SCROLL FOR NEXT