இந்தியா

பங்குச் சந்தை வீழ்ச்சி எதிரொலி!: முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி இழப்பு

DIN


பங்குச் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. 
ரூபாய் மதிப்பில் காணப்பட்டு வரும் தொடர் சரிவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு, சீன பொருள்கள் இறக்குமதி மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக கூடுதல் வரி விதித்தது உள்ளிட்டவை பங்குச் சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 
சாதகமற்ற நிலவரங்களின் காரணமாக, திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 505 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 47 காசுகள் சரிந்து 72.98-ஆனது. ஆசிய கரன்சிகளில் ரூபாயின் செயல்பாடுதான் மிக மோசமானதாக நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 
இதனிடையே, டிரம்ப்பின் அதிரடி வரி விதிப்பு சீனா-அமெரிக்கா இடையே வர்த்தகப் போரை மேலும் அதிகரிக்க செய்யும் என்ற நிலைப்பாடு செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தை கடுமையாக பாதிப்பதாக அமைந்தது.
சாதகமற்ற சூழலை கருத்தில் கொண்டு, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர். இதையடுத்து, செவ்வாய்க்கிழமையன்றும் சென்செக்ஸ் 295 புள்ளிகள் இழப்பை சந்தித்தது. 
கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 800 புள்ளிகளை இழந்தது. சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 31 நிறுவனங்களில், பெரும்பாலான நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
முன்னணி நிறுவனப் பங்குகள் மிகவும் குறைந்த விலைக்கு கைமாறியதையடுத்து, முதலீட்டாளர்களுக்கு ரூ.2.72 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT