இந்தியா

ரூ. 9,100 கோடிக்கு ராணுவ தளவாடங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

DIN


ரூ. 9,100 கோடி செலவில் ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியது.
முப்படைகளுக்கும் தேவையான கருவிகள் மற்றும் ஆயுதங்கள் வாங்குவது குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரிய அமைப்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்(டிஏசி) முடிவெடுக்கும். பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற டிஏசி கூட்டத்தில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள் கொள்முதல் செய்ய அந்த அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகாஷ் ஏவுகணைகள் உள்பட பல கருவிகள் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், டி90 ரக டேங்கர்களில் பயன்படுத்தப்படும் நவீன ஆயுதங்களுக்கான மாதிரி வடிவமைப்புக்கும், பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT