இந்தியா

தில்லி முதல்வருடன் ஜேஎன்யு மாணவர் சங்க புதிய தலைவர் சாய் பாலாஜி சந்திப்பு

DIN

ஜேஎன்யு மாணவர் சங்க புதிய தலைவர் சாய் பாலாஜியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் இன்று (புதன்கிழமை) சந்தித்தனர்.  

அண்மையில் நடைபெற்று முடிந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவு பெற்ற மாணவர் சங்கங்களான ஏஐஎஸ்ஏ, எஸ்எப்ஐ, டிஎஸ்எப், ஏஐஎஸ்எப் ஆகியவை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.  

தலைவர், துணைத்தலைவர், பொதுச் செயலர், இணைச் செயலர் ஆகிய 4 முக்கிய பதவிகளை இடதுசாரிகள் கூட்டணிகளே கைப்பற்றின.

தலைவர் பதவிக்கு தெலுங்கானாவைச் சேர்ந்த சாய் பாலாஜி வெற்றி பெற்றார். அதேபோல், இணைச் செயலர் பதவிக்கு கேரளத்தைச் சேர்ந்த அமுதா ஜெயதீப் வெற்றி பெற்றார். 

இதையடுத்து, ஏபிவிபி மாணவர்கள் விடுதியில் சில மாணவர்களை கடுமையாக தாக்கியதாகவும், மேலும் அவரையும் தாக்கியதாகவும் புதிய மாணவர் சங்கத் தலைவர் சாய் பாலாஜி தெரிவித்தார். இடதுசாரி மாணவர்கள் சிலர், ஏபிவிபி மாணவர்களை தாக்கியதாக ஏபிவிபி மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் தொடர்பாக இடதுசாரி மாணவர் சங்கத்தின் சார்பிலும், ஏபிவிபியினர் சார்பிலும் வசந்த் குஞ்ச் (வடக்கு) காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜேஎன்யு மாணவர் சங்க புதிய தலைவர் சாய் பாலாஜி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை இன்று சந்தித்தார்.   

இந்த சந்திப்பு குறித்து, சாய் பாலாஜி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, 

"ஜேஎன்யு மாணவர் சங்கம் மற்றும் ஜேஎன்யு மாணவர்கள் சார்பில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்தேன். மாணவர் சங்கத் தேர்தலில் ஏபிவிபி மாணவர்களை தோற்கடித்து நாம் அபார வெற்றி பெற்றதற்கு ஜேஎன்யு மாணவர்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்தார். 

ஜேஎன்யு மாணவர்கள் மீது ஏபிவிபியின் வளர்ந்து வரும் வன்முறை மற்றும் பயங்கரவாதம் குறித்து தில்லி முதல்வரிடம் விவரித்தேன். மேலும், இந்த செயலில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது துணை வேந்தர் நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் முதல்வரிடம் விவரிக்கப்பட்டுள்ளது.

நாம் ஒற்றுமை, அமைதிப் பேரணி மற்றும் ஒத்துழையாமை உள்ளிட்டவற்றின் மூலம் இந்த வன்முறை உள்ளிட்டவற்றை எவ்வாறு எதிர்க்கிறோம் என்று எடுத்துரைத்ததை கேட்டு அவர் அதனை உணர்ந்தார்.       

அவர் நம்மை ஒற்றுமையாக இருந்து போராடுமாறு கேட்டுக்கொண்டார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT