இந்தியா

பிரதமருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் சந்திப்பு

DIN


ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி, பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தார். சந்திப்பின் போது, இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பான உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தில்லியில் உள்ள ஹைதராபாத் அரசு இல்லத்தில், அதிபர் அஷ்ரப் கனியை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் அமைதியை நிலைநாட்ட அந்நாட்டு அரசுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. அந்நாட்டில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளிலும் இந்தியா ஆர்வமுடன் பங்கேற்று வருகிறது. 
மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக, கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் இதுவரை ரூ.1. 44 லட்சம் கோடி வரை இந்தியா செலவழித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT