இந்தியா

சர்வதேச அளவிலான ஐஐசிசி அரங்கம்: அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

DIN

தில்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

தில்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அந்த அரங்கத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐஐசிசி அரங்கம் என்பது அளவிலும், தரத்திலும் உலகில் தலைசிறந்து விளங்கும் அரங்குகள் அல்லது மையங்களோடு போட்டியை ஏற்படுத்துவதாக அமையும். 
சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிகழ்ச்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள், கண்காட்சிகள், வர்த்தக மாநாடுகள் போன்றவற்றை அந்த அரங்கில் நடத்த முடியும். நாட்டிலேயே மிகப் பெரிய உள்மாநாட்டு அரங்காகவும், உலகிலேயே 10-ஆவது பெரிய அரங்கமாகவும் ஐஐசிசி திகழும்.

இந்தத் திட்டத்தின் மூலமாக 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐஐசிசி அரங்கில் நட்சத்திர விடுதிகள், உயர் அதிகாரமுடைய அலுவலகங்கள், திறந்தவெளி கண்காட்சி மையம், வாடிக்கையாளர் சேவை பகுதிகள் ஆகிய உள்வளாக வர்த்தக இடங்களும் அமைந்திருக்கும். இங்கு அமையும் மாநாட்டு அரங்கில் ஒரே சமயத்தில் 11,000 பேர் அமர முடியும். 

ஐந்து கண்காட்சி அரங்குகள், ஒரு கிலோமீட்டர் தொலைவிலான நுழைவு வாயில் ஆகியவை இடம்பெறும். 2019 டிசம்பர் மாதம் மற்றும் 2024 டிசம்பர் மாதம் என இரு தவணைகளாக இந்த திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT