இந்தியா

மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி: பயணிகள் செல்ஃபி

DIN

தில்லியில், சர்வதேச அளவிலான மாநாடுகள், கண்காட்சிகள் உள்ளிட்டவற்றை நடத்தும் வகையிலான அரங்கம் கட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

தில்லியின் துவாரகா பகுதியில் சுமார் 221.37 ஏக்கர் நிலத்தில் ரூ.25,703 கோடி மதிப்பில் அந்த அரங்கத்தை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையம் (ஐஐசிசி) என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அடிக்கல் நாட்டு விழாவுக்கு தௌலா கௌன் முதல் துவாரகா வரை பிரதமர் நரேந்திர மோடி, மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த ரயிலில் பயணம் மேற்கொண்டவர்களுடன் கைகுலுக்கி, கலந்துரையாடினார். பயணிகளும் நலம் விசாரித்து அவருடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப் படத்தில் சிம்பு: விடியோ வெளியீடு

அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு!

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT