இந்தியா

ஆப்பிரிக்காவில் இந்தியர் உள்பட மூவர் கடத்தல்

DIN


ஆப்பிரிக்காவின் புர்கினோ ஃபசோ நாட்டில், ஓர் இந்தியர் உள்பட மூவரை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டின் வடக்குப் பகுதியிலுள்ள தங்கச்சுரங்கம் ஒன்றில் பணி புரியும் மூவர் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களுள் இருவர் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்றொருவர் உள்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். சுரங்கத்தில் வேலையை முடித்து விட்டு, அவர்கள் வீடு திரும்பும் வேளையில் இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களால் இந்தக் கடத்தல் சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
புர்கினோ ஃபசோ நாட்டில், பயங்கரவாதிகளால் வெளிநாட்டினர் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, 2015-ஆம் ஆண்டு, ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் துணை இயக்கத்தினால் கடத்தப்பட்டார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் இருவர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT