இந்தியா

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத்துறை கோரிக்கையை ஒத்திவைத்தது தில்லி பாட்டியாலா நீதிமன்றம்

DIN

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை தில்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 

இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தில்லி பாட்டியாலா நீதிமன்றம் தடை விதித்த நிலையில் அதனை எதிர்த்து அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரும் மனு மீதான விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT