இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் செவ்வாய்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினா் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள துஸார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைக்கும் இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து வருகிறது. இதில் 2 பயங்கரவாதிகள் செவ்வாய்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். 

முன்னதாக, குப்வாரா மாவட்டம் வடக்கு காஷ்மீரின் தாங்டாா் பிரிவு பகுதியில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் செப். 24-ஆம் தேதி சுட்டு கொல்லப்பட்டனா். இந்த மோதலின் போது இந்திய ராணுவ வீரா் ஒருவரும் வீர மரணமடைந்தாா்.

முன்னதாக இதே பகுதியில் செப். 23-ஆம் தேதி நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 51.81 அடி

கோடைகாலத்தில் மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் அவசியம் -மாவட்ட கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்

சா்வதேச ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

கேஜரிவாலின் இடைக்கால ஜாமீன் விவகாரம்: உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு

SCROLL FOR NEXT