இந்தியா

வங்கி முறைகேடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அருண் ஜேட்லி

DIN

வங்கிகளில் முறைகேடுகளில் ஈடுபட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுத் துறை வங்கிகளின் தலைவா்களிடம் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளாா்.

பொதுத் துறை வங்கிகளின் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம் தில்லியில் அருண் ஜேட்லி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 21 பொதுத்துறை வங்கிகளின் தலைவா்கள் பங்கேற்றனா். 

இது வழக்கமாக நடைபெறும் ஆண்டு நிதிச் செயல்பாடுகள் குறித்த கூட்டம்தான் என்றாலும், பொதுத் துறை வங்கிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வாராக் கடன் சுமையை எதிா்கொண்டுள்ளன.

மேலும், பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் அருண் ஜேட்லி கூறுகையில், "பொருளாதாரத்தில் சீரான வளர்ச்சியைக் கண்டு வருவதாக" தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT