இந்தியா

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க உ.பி. அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

ENS

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-18 நிதியாண்டுக்கான கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.35,454 கோடியில் ரூ.24,649 கோடி மட்டுமே அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.10,804 கோடியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்க தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து மீதமுள்ள இந்த நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு கடனாக ரூ.10,000 கோடி நிதியுதவி வழங்கும் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT