இந்தியா

ராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சி: நிர்மலா சீதாராமன்

நமது பாதுகாப்புப் படையை பலவீனப்படுத்தும் இச்செயல் சரியானது தானா? என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.

DIN

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும். தேச விரோத சட்டம் நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தேசத்துரோக தண்டனைச் சட்டம் ரத்து செய்யப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதியை ஏற்க முடியாது. 

நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்காதது காங்கிரஸ் கட்சி. இது ராணுவ வீரர்களின் மன உறுதியை சீர்குலைக்கும் செயலாகும். நமது பாதுகாப்புப் படையை பலவீனப்படுத்தும் இச்செயல் சரியானது தானா? என்று கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

நெல்லை நகரம், பாளை.யில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரசாரம்

SCROLL FOR NEXT