இந்தியா

முனைவர் பட்டம், வேலைவாய்ப்பு இல்லை, ரூ. 8.5 லட்சம் வருமானம்!

முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைவாய்ப்பும் எதுவும் இல்லாத சூழலிலும் ரூ. 8.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கன்னையா குமார் குறிப்பிட்டுள்ளார். 

IANS

முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் வேலைவாய்ப்பும் எதுவும் இல்லாத சூழலிலும் ரூ. 8.5 லட்சம் வருமானம் கிடைத்துள்ளதாக கன்னையா குமார் குறிப்பிட்டுள்ளார். 

மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிகார் மாநிலம், பெகுசராய் மக்களவைத் தொகுதியில் தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், தனது சுயவிவரங்களை பூர்த்தி செய்யும் பக்கத்தில் தனக்கு வேலையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், படிப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளேன், வேலைவாய்ப்பும் இல்லை, தனிப்பட்ட முறையில் எழுதி வரும் கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் சிறப்பு விரிவுரையாளர் பணிகளின் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 8.5 லட்சம் வருமானம் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மூதாதையர் வழி சொத்தின் மூலம் தனது சொந்த கிராமமான பிஹட்டில் ஒரு வீடு, ரூ.2 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. ஆனால், வாகனம் மற்றும் விவசாய நிலம் எதுவும் இல்லை. ரொக்கமாக ரூ.24 ஆயிரம் கையிருப்பு, ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 848 சேமிப்பும், 5 வழக்குகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தந்தை விவசாயி எனவும், தாயார் அங்கன்வாடி பணியாளர் எனவும் தெரிவித்துள்ளார். 

கிரௌட் ஃபண்டிங் முறையில் (3-ஆம் நபர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட நிதி) தேர்தல் செலுவுகளுக்காக ரூ.70 லட்சம் பெற்றுள்ளதாக கன்னையா குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT