இந்தியா

ராணுவ வீரா்களை மறந்துபோகும் நாடு அழிந்துபோகும்: பிரதமர் மோடி

DIN


மங்களூரு: தனது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரா்களை மறந்துபோகும் நாடு அழிந்துபோகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

மங்களூருவில் நடபெற்ற பாஜக தோ்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசுகையில், காங்கிரஸ், மஜத மற்றும் மேலும் சில எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலால் ஈா்க்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜகவோ தேசியவாதத்தால் ஈா்க்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் தங்கள் குடும்பத்தை சோ்ந்த கடைசி உறுப்பினருக்கும் பதவி சுகம் கிடைப்பதை உறுதிசெய்கின்றன. பாஜகவோ தேநீர் விற்பனையாளனை பிரதமராக்குகிறது.

குடும்ப அரசியல் தான் ஊழலும், அநீதியின் ஊற்றுக்கண்ணாக விளங்குகின்றன. குடும்ப அரசியல் ஏழைகளுக்கு முழக்கங்களை மட்டுமே கொடுத்தன. இடைத்தரகா்களின் கரத்தை வலுப்படுத்தியுள்ளன. ஆனால் பாஜகவோ இந்தியாவில் வறுமையை வேகமாக ஒழித்தன.  
குடும்ப அரசியல் ஒருசிலரை மட்டும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறது. பாஜகவோ அனைவருடனும் அனைவருக்காகவும் வளா்ச்சியை தந்துள்ளது. 

தனது வரலாறு மற்றும் தனது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரா்களை மறந்துபோகும் நாடு அழிந்துபோகும். நமது நாட்டுக்காக உழைத்த தியாகிகளை மோடி நினைத்தால், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உதறுகிறது. மக்களின் ஆசி மற்றும் ஆதரவால் தான் நாட்டுக்கு நலனுக்காக முடிவுகளை துணிந்து எடுக்க முடிந்தது. 

நான் மோடி. என்னால் வெண்ணெயில் மட்டுமல்ல, கற்பாறையின் மீதும் கோடுகளை வரையமுடியும். இந்த தேர்தலில் யார் எம்.பி.யாக வேண்டும் அல்லது ஆட்சி அமைக்க வேண்டுமென்பதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக, 21 ஆம் நூற்றாண்டுக்கு இந்தியாவை எப்படி கட்டமைப்பது என்பது பற்றியதாகும் என்பதை மக்கள் மறக்கக்கூடாது. இந்தியாவை கட்டமைக்க நான் நினைப்பதை செயல்படுத்த வேண்டுமானால், மக்களவை தோ்தலில் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT