முகப்பு
இந்தியா

சபரிமலையின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவோம்: காங்கிரஸ் வாக்குறுதி

காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தால் நிச்சயம் சபரிமலையின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:


திருவனந்தபுரம்: காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தால் நிச்சயம் சபரிமலையின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்த 12 மணி நேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா செய்தியாளர்களிடம் பேசுகையில், சபரிமலை விவகாரத்தில் மோடி எதையும் செய்யாமல் தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

2016ம் ஆண்டே சபரிமலை விவகாரம் குறித்து கருத்துக் கூறிய காங்கிரஸ் கோயில் மற்றும் வழிபாடு குறித்த நம்பிக்கையும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.