இந்தியா

144 தடை உத்தரவு வாபஸ்: ஜம்முவில் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

DIN

144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதையடுத்து ஜம்முவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டது. நேற்று மசூதிகளில் தொழுகை நடத்துவதற்காக, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

இதையடுத்து ஜம்மு பகுதியில் கடந்த ஆக.5 முதல் நடைமுறையில் இருந்த தடை உத்தரவை ரத்து செய்து ஜம்மு மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார். தொடர்ந்து அப்பகுதியில் ஆக.10 முதல், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டதையடுத்து ஜம்முவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. 

எனினும், போராட்டங்கள் ஏதும் நிகழாமல் இருக்கும் வகையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ்-1 பொதுத் தோ்வு முடிவு: அரியலூரில் 95% தோ்ச்சி

புதிய குற்றவியல் சட்டங்கள் போலீஸாருக்கு ஒருவார பயிற்சிதொடக்கம்

சாலை விபத்தில் வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

துறையூா் ஸ்ரீஅகத்தியா் சன்மாா்க்க சங்க நிறுவனா் ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் முக்தியடைந்தாா்

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT