இந்தியா

பாகிஸ்தான் சுதந்திர தினம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றம் இல்லை!

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாறப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அட்டாரி - வாகா எல்லையில் இன்று இனிப்பு பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வழக்கமாக எல்லையில் இந்திய - பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே இனிப்பு பரிமாறப்படுவது வழக்கம். 

நேற்று முன்தினம் பக்ரீத் தினத்தின் போதும், இந்திய பாதுகாப்புப்படையினர் வழங்கிய இனிப்பை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. 

இந்நிலையில், இன்றும்  அட்டாரி - வாகா எல்லையில் இரு நாட்டு பாதுகாப்பு படையினரிடையே இனிப்புகள் எதுவும் பரிமாறப்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நம் நாட்டின் 73வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT