இந்தியா

சாணம் கொட்டுவதில் தகராறு: உ.பியில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை 

வீட்டுக்கு அருகே சாணம் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில், உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழந்துள்ளது.

IANS

சஹரன்பூர்: வீட்டுக்கு அருகே சாணம் கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில், உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஹிந்தி நாளிதழ் டைனிக் ஜாக்ரன். இதில் பணியாற்றி வருபவர் ஆஷிஷ். அவரது சகோதரர் அஷுதோஷ். சஹரன்பூரில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகே வசித்து வருபவர் மஹிபால். இவர் அருகில் உள்ள கொத்வாலி என்னும் இடத்தில மாட்டுப் பண்ணை நடத்தி வருகிறார்.

அந்தப் பண்ணையில் இருந்து கொண்டு வரப்படும் சாணத்தை மஹிபாலின் வேலையாட்கள் ஆஷிஷ் சகோதரரகளின் இல்லத்திற்கு அருகே கொட்டி வந்துள்ளனர். இதன் காரணமாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி ஞாயிறன்று மஹிபால் துப்பாக்கியுடன் ஆஷிஷ் வீட்டிற்குச் சென்று சகோதரர்களை இருவரையும் சுட்டுக் கொன்று விட்டு, தப்பபிச் சென்று விட்டார்.

இதன் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வருவதால் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தப்பிய மஹிபாலை பிடிக்க தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, டிஜிபி உபேந்திரா அகர்வால் தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT