இந்தியா

நேதாஜி பற்றிய மர்மத்தை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது: மம்தா பானர்ஜி

DIN

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காணாமல் போனதன் மர்மத்தை அறிந்து கொள்வதற்கும், அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரிந்து கொள்வதற்கும் மக்களுக்கு உரிமை உள்ளது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1945-ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 18) நேதாஜி, தைவானின் தைகோகு விமான நிலையத்திலிருந்து விமானத்தில் புறப்பட்டுச் சென்று மாயமானார். அவர் காணாமல்போய் 74 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இன்னமும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மண்ணின் மைந்தரான அவரைப் பற்றி அறிந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தைவானிலிருந்து நேதாஜி கிளம்பிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்து விட்டதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் உறுதிப்படுத்தபடாதவையாகவே இருக்கின்றன.
நேதாஜி தைவான் விமான விபத்தில் இறந்தது தொடர்பான ஜப்பான் அரசின் விசாரணையை அறிக்கையை ஏற்றுக் கொள்வதாக நரேந்திர மோடி அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி அறிவித்தது.
இருப்பினும், நேதாஜி விமான விபத்திலிருந்து தப்பி விட்டதாகவும், அவர் மறைமுக வாழ்க்கை நடத்தியதாகவும் இன்னும் பலர் நம்பி வருகின்றனர்.   
இந்த சூழ்நிலையில், நேதாஜியின் மர்மம் குறித்து தெரிந்து கொள்ள அனைவருக்கும் உரிமை உள்ளது என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

SCROLL FOR NEXT