இந்தியா

காஷ்மீர் விவகாரம்: அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை 

IANS

புது தில்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 370-ன் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அம்மாநிலமானது இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்டிருந்த தொலை தொடர்பு உள்ளிட்ட சேவைகள் பகுதி பகுதியாக அளிக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய 11 நாட்கள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீரில்தான் தங்கி இருந்து, அங்குள்ள பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அவர் சமீபத்தில்தான் தில்லி திரும்பினார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.

தில்லியில் உள்ள உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்திற்கு அமித் ஷா தலைமை தங்குகிறார். அஜித் தோவலுடன் மத்திய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ளனர்.  

காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்தும் அங்கு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் மறு ஆய்வு செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT