இந்தியா

ஒடிஸா: லாரி மோதி 3 யானைகள் பலி

DIN


ஒடிஸா மாநிலம், கியோஞ்சார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 3 யானைகள் உயிரிழந்தன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை கூறுகையில், கியோஞ்சார் மாவட்டத்தில் கட்கான் வனப்பகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை 3 யானைகள் வியாழக்கிழமை கடந்தன. சாலையைக் கடக்கும்போது, அந்தப் பகுதியில் வேகமாக வந்த லாரி மோதி அந்த 3 யானைகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தில், 16 வயதான ஒரு பெண் யானையும், ஒரு வயது நிரம்பிய குட்டி யானையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
தகவலறிந்த வனத்துறை அதிகாரி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றொரு பெண் யானையை மீட்டு சிகிச்சையளித்தார். எனினும், சிகிச்சையின்போது அந்த யானையும் உயிரிழந்தது.
யானைகள் மீது மோதிய லாரியை சிறிது தூரத்தில் வனத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். எனினும், அதன் ஓட்டுநர் தப்பி விட்டார். ஓட்டுநரின் உதவியாளர் மட்டும் கைது செய்யப்பட்டார் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT