இந்தியா

திருமலை: ரூ.5.15 கோடி சில்லறை நாணயங்கள் வங்கியில் டெபாசிட்

DIN


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் நிலுவையில் உள்ள சில்லறை நாணயங்கள் ரூ.5.15 கோடியை பல வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ளது.
திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் சில்லறை நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் என பிரித்து ரூபாய் நோட்டுகளை நேரடியாக வங்கியில் டெபாசிட் செய்து வருகிறது. சில்லறை நாணயங்கள் மட்டும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலகக் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 
சில்லறை நாணயங்களை வங்கி ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்ததால் அவை பல ஆண்டுகளாக வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டு வருகிறது. தற்போது அவை ரூ.20 கோடியை எட்டியுள்ளது. 
இதுகுறித்து அறிந்த தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி சில்லறை நாணயங்களை ஏற்கும் வங்கிகளில் அதே அளவில் பணம் வரவு வைக்கப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து வங்கிகள் சில்லறை நாணயங்களை ஏற்றுக் கொள்ள முன்வந்தன. 
அதன்படி வியாழக்கிழமை ரூ.5.15 கோடி மதிப்புள்ள சில்லறை நாணயங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சில்லறை நாணயங்களும் விரைவில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT