இந்தியா

தாக்குதல் அச்சுறுத்தல்: எல்லையில் உஷார் நிலையில் பாதுகாப்புப் படை 

DIN

எல்லை தாண்டிய வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் இருப்பதாக, ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
 இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீர் அரசு முதன்மைச் செயலரும், மாநில அரசின் செய்தித் தொடர்பாளருமான ரோஹித் கன்சால் சனிக்கிழமை கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய வகையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கான அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. எனவே, மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
 காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் 69 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட சரகங்களில் பகல் நேரங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதேபோல், ஜம்மு பகுதியிலும் 81 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட சரகங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று ரோஹித் கன்சால் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT