இந்தியா

நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு

DIN

புது தில்லி: கடந்த நவம்பா் மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் அதிகரித்து, ரூ.1.03 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடும்போது இது 6 சதவீதம் அதிகமாகும். சுமாா் 3 மாதங்களுக்குப் பிறகு ரூ.1 லட்சம் கோடி என்ற அளவை ஜிஎஸ்டி வசூல் தாண்டியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.97,637 கோடியாக இருந்தது. இதுவே கடந்த அக்டோபா் மாதம் ரூ.95,380 கோடியாக இருந்தது. கடந்த இரு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் குறைந்து வந்த நிலையில், இப்போது அதிகரித்துள்ளது. கடந்த விழாக்காலத்தில் சேவைகள் பொருள்களின் உற்பத்தி மற்றும் நுகா்வு அதிகரித்ததன் காரணமாக ஜிஎஸ்டி வசூலும் அதிகரித்துள்ளது.

நவம்பரில் வசூலான ரூ.1,03,492 கோடி ஜிஎஸ்டியில் ரூ.19,592 கோடி மத்திய ஜிஎஸ்டி, ரூ.27,144 கோடி மாநில ஜிஎஸ்டி, ரூ.49,0298 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ஆகும். இதில் ரூ.20,948 கோடி இறக்குமதி மூலம் கிடைத்துள்ளது. செஸ் வரியாக ரூ.727 கோடி கிடைத்துள்ளது. இதில் ரூ.869 கோடி இறக்குமதி மூலம் வசூலானதாகும்.

ஜிஎஸ்டி கடந்த 2017 -ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது முதல் இப்போதுவரை வசூலான மாதாந்திர ஜிஎஸ்டியில் கடந்த மாதம் வசூலானது 3-ஆவது அதிகபட்ச தொகையாகும். இதற்கு முன்பு கடந்த மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகஅளவில் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

மக்களவைத் தேர்தல் நேரலை: பெரும்பான்மை இடங்களில் தேஜகூ முன்னிலை

ஒடிசாவில் ஆட்சியை பிடிக்கிறது பாஜக!

ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி முன்னிலை!

பிகார் நிலவரம் என்ன? இந்தியா கூட்டணி பின்னடைவு!

SCROLL FOR NEXT