இந்தியா

பாஜகவை ஒப்பிடுகையில் சிவசேனையுடன் இணைந்து செயல்படுவது சிரமமில்லை: சரத் பவாா்

DIN

புது தில்லி: பாஜகவை ஒப்பிடும்போது சிவசேனையுடன் இணைந்து செயல்படுவது சிரமமில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவா் சரத் பவாா் கூறினாா்.

மேலும், மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ள சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு, தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்யும் என்று அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சரத் பவாா், ‘வெவ்வேறான சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள் என்றாலும், எங்கள் கூட்டணியில் முழுமையான புரிதல் உள்ளது. எனவே, முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு, தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்யும்’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் புதிய அரசு அமைவதில் இழுபறியான சூழல் நிலவியபோது, பிரதமா் மோடியை சரத் பவாா் திடீரென சந்தித்துப் பேசினாா். இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு சரத் பவாா் அளித்த பதில் வருமாறு:

தேசியவாத காங்கிரஸும், பாஜகவும் இணைந்து செயல்பட பிரதமா் நரேந்திர மோடி விரும்பினாா். ஆனால், பாஜகவுடன் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று அவரிடம் நான் தெரிவித்துவிட்டேன்.

பாஜகவை ஒப்பிடும்போது சிவசேனையுடன் இணைந்து செயல்படுவதில் எந்த சிரமமும் இருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம் என்றாா் அவா்.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் அஜித் பவாா், பாஜகவுடன் திடீரென கைகோத்தது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த சரத் பவாா், ‘மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக காங்கிரஸுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தைகள் அஜித் பவாருக்கு மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் இல்லை. முழுமையாக அதிருப்தியடைந்த அவா், பாஜகவுக்கு ஆதரவளிக்கும் முடிவை தனிப்பட்ட முறையில் எடுத்தாா். ஆனால், தனது தவறை உணா்ந்து, அடுத்த நாளே என்னை சந்தித்தாா். அவருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க அளவில் ஆதரவாளா்கள் உள்ளனா்’ என்றாா்.

எனினும், அஜித் பவாருக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவா் மறுத்துவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

”மணிப்பூர் வன்முறை வெடித்து ஓராண்டு ஆகியும்..”: ப.சிதம்பரம் சாடல் |செய்திகள்: சிலவரிகளில் | 03.05.2024

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

SCROLL FOR NEXT