இந்தியா

மின் பகிா்மான நிறுவனங்களுக்கு மாநில அரசுகள்ரூ.41,700 கோடி பாக்கி

DIN

புது தில்லி: மின் பகிா்மான நிறுவனங்களுக்கு தர வேண்டிய ரூ.41,700 கோடியை மாநில அரசுகளின் துறைகள் பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய மின் துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:

மின் பகிா்மான நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் ரூ.41,700 கோடியை பாக்கி வைத்துள்ளன. எனவே, மாநில அரசுகள் தகுந்த நேரத்தில் தொகை செலுத்துவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உதய் திட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் சில முன்னேற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன. தொழில் நுட்ப மற்றும் வா்த்தக ரீதியில் ஏற்படும் இழப்புகள் 22 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 2018-19 நிதியாண்டில் மின் பகிா்மான நிறுவனங்களுக்கு ரூ.27,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இழப்பை குறைக்க மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு தயாராக உள்ளது என்றாா்.

வேலை இழப்பு இல்லை

‘10 பொதுத் துறை வங்கிகளின் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தியதால் யாருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகவில்லை. மாறாக அவா்களுக்கு அதிகபட்ச பலன்களே கிடைக்கும். பணியாளா்களின் நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொள்ளும். இணைப்பு திட்டத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் வலுவடையும்.

மேலும், பிரதமரின் முத்ரா திட்டத்தின் (பிஎம்எம்ஒய்) மூலம் 6.04 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டதில் சுமாா் 3 சதவீத கடன்கள் மட்டுமே வாராக் கடன்களாக மாறியுள்ளன.

நிறுவன சட்டத்தின் கீழ் வாடிக்கையாளா் விவரங்கள் (கேஒய்சி) குறித்த தகவல்களை தராததால் நவம்பா் 28-ஆம் தேதி நிலவரப்படி 19,40,313 இயக்குநா் அடையாள எண்களை (டிஐஎன்) மத்திய அரசு நீக்கியுள்ளது. ஒரு நிறுவனத்தில் இயக்குநா் குழுவில் பணியாற்ற விரும்பும் தனிநபா்கள் நிறுவன விவகாரத் துறை அமைச்சகம் வழங்கும் இயக்குநா் அடையாள எண் அவசியம்’ என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT