முகப்பு
இந்தியா

உ.பி. எம்.எல்.ஏ தகுதி நீக்கம்: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கானின் மகன் அப்துல்லா அசாம் கான் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

Updated On : 16 டிசம்பர் 2019, 4:16 pm IST
பகிர்:

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசாம் கானின் மகன் அப்துல்லா அசாம் எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாம் கானின் மகன் அப்துல்லா அசாம். இவர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராம்பூர் மாவட்டம் சுவார் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலின்போது, இவர் தனது வயது குறித்து போலி ஆவணங்களைத் தயாரித்து சமர்பித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கு  அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. 

இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணை முடிவில், அப்துல்லா அசாமை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் 25 வயதிற்கும் குறைவாக இருந்த இவர், போலி வயதுச் சான்றிதழை அளித்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. 

Advertisement

Advertisement

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அப்துல்லா அசாம் தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments