முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

சி‌ன்​ன‌‌த்​திரை

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார், நடிகர் தங்கதுரை.

Updated On : 28 ஜூன் 2026, 4:16 am IST
பகிர்:

சென்னையில் புது வீடு வாங்கிக் குடியேறி இருக்கிறார், நடிகர் தங்கதுரை.விஜய் டிவியின் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தங்கதுரை. டிவியிலிருந்து சினிமா பக்கமும் வந்தவர் 'டிடி ரிட்டர்ன்ஸ்', 'பன்னிக்குட்டி' உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருந்தார். மேலும் சில படங்கள் கைவசம் இருப்பதாகவும் தெரிகிறது.

தற்போது சென்னையில் சொந்தமாக வீடு வாங்கி அண்மையில் கிரஹப் பிரவேசம் நடத்தியிருக்கிறார். நடிகர்கள் விஜய் சேதுபதி, செந்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமைச்சர்கள் ராஜ்மோகன், ஸ்ரீநாத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்தப் புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்டனர்.

'மூணு பெட்ரூம் வீடு. நீச்சல் குளம், லைப்ரரி, விளையாட கிரவுண்டு என எல்லா வசதியும் இருக்கிற வீடு. எனக்குக் கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் பிள்ளைக்குக் கிடைச்சிருக்குங்கிறதுல சந்தோஷமா இருக்கு. அதேபோல சொந்தக்காரங்க எல்லாரையும் ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டேன். சிலர் கண் பட்டுடும்னு கிரஹப் பிரவேசத்தை கிராண்டா செய்ய வேண்டாம்னு சொல்வாங்க. என்னால இதை ஏத்துக்க முடியலை.

Advertisement

Advertisement

என் சொந்த பந்தம், அண்ணன், தம்பி, பங்காளிங்க எல்லாமே ஒண்ணுமண்ணாவே கஷ்டப்பட்டுட்டுதான் இருந்தோம். அதுல ஓரளவு வசதி வந்த நான் புதுசா ஒரு வீட்டை வாங்கிக் குடியேறுகிறப்ப அவங்களுக்கும் அது ஓர் உத்வேகத்தைத் தருமில்லையா? நாம நல்லவிதமா யோசிச்சா நமக்கும் நல்லதுதான் நடக்கும்னு உறுதியா நம்புறேன்'' என நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments