இந்தியா

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஆன்ம ஞானம் தனித்துவமிக்கது: பிரதமர் மோடி புகழஞ்சலி

DIN

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஆன்ம ஞானம் மெய்சிலிர்க்கக்கூடியது என பிரதமர் நரேந்திர மோடி தனது அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது இரங்கல் செய்தியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது,

உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள், அவரது லட்சக்கணக்கான பக்தர்களின் மனதிலும், நினைவிலும் என்றும் நிலைத்திருப்பார். ஆன்மீகம் மற்றும் சேவையின் சக்திவாய்ந்த ஒளிவிளக்காய் திகழ்ந்தவர். சமுதாயப் பணிகளில் இரக்க குணத்துடன் தொடர்ந்து தன்னை நியாயமான முறையில் ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் நான் பாக்கியசாலியாக உணர்கிறேன். சித்திரைப் பௌர்ணமி நாளில் அவருடனான சந்திப்பு என்றைக்கும் மறக்க முடியாதது. அவருடைய ஆன்ம ஞானம் தனித்துவமிக்கது, மெய்சிலிர்க்கக்கூடியது. அவருடைய எண்ணற்ற பக்தர்களுக்கு நான் எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், ஓம் சாந்தி என புகழஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மழை: கொடைக்கானல் அருவிகளில் நீா் வரத்து அதிகரிப்பு

வைகை ஆற்றில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

அரசு அருங்காட்சியகத்தில் சூதுபவள மணிகள் காட்சிக்கு வைப்பு

சிஎஸ்கே போராட்டம் வீண்: பிளே-ஆஃபில் ஆர்சிபி!

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 13-இல் போராட்டம்: போக்குவரத்துத் துறை ஊழியா் சங்கம்

SCROLL FOR NEXT