இந்தியா

தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பாஜக காரணமா? 

DIN

தில்லி: தில்லி முதல்வர் கேஜரிவால் கார் மீது  வெள்ளியன்று மர்ம நபர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு,  பாஜகவினர்தான் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சி புகார் கூறியுள்ளது.

தில்லி முதல்வரான அவிந்த் கேஜரிவால் வெள்ளியன்று நரில்லா பகுதியில்  வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு  சென்று கொண்டிருந்தார். அவரது கார் செல்லும் வழியில் 100-க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் குழுமியிருந்தனர். அவர்கள் முதல்வரை சந்திக்க விரும்பி அதற்கு முயன்றனர்.

ஆனால் அவரது கார் அப்பகுதியில் நிற்காமல் சென்றதால் அதிருப்தியடைந்த அவர்கள் தாங்கள் கையிலிருந்த தடிகளால்,முதல்வர் காரை தாக்கினர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கார் மீதான தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முதல்வர் அலுவலக தரப்பு தெரிவிக்கிறது.

அதேசமயம் அடையாளம் தெரியாத நபர்கள் மீது போலீசில்புகார் அளித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இதன் பின்னணியில் பாஜக தொண்டர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT